Author Topic: ~ சத்தான புதினா ஆம்லெட் செய்வது எப்படி ~  (Read 318 times)

Online MysteRy

சத்தான புதினா ஆம்லெட் செய்வது எப்படி



தேவையான பொருட்கள் :

முட்டை – 4
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – 1 கப்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
* தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள்.
* ஆம்லேட்டை சுற்றி எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.
* சுவையான வித்தியாசமான புதினா ஆம்லெட் ரெடி.

குறிப்பு :

* டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் முட்டையின் வெள்ளைக்கருமை மட்டும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மஞ்சள்கருவுடன் சேர்த்து கொடுக்கலாம்.