Author Topic: புகை பிடித்தல்  (Read 431 times)

Offline thamilan

புகை பிடித்தல்
« on: August 19, 2016, 09:55:01 AM »
யோசித்துப் பார்
உன் பத்து விரல்களில்
இரண்டு விரல்கள் மட்டும் தானே
நீ
புகைப்பிடிப்பதை ஆதரிகின்றன

சிகரெட்டை சிகரெட்டாக பார்க்காமல்
உற்றுப் பாருங்கள்
வெள்ளை துணியால் மூடப்பட்ட
சடலம் போல தெரியவில்லையா
அதற்க்கு அடிமையானால்
நீயும் வெள்ளைத்துணியால் மூடப்படுவாய்
ஜாக்கிரத்தை

பொது இடங்களில்
பகையே இல்லாமல்
அடுத்தவர் மீது தொடுக்கும்
வன்முறையே
புகை பிடித்தல்

சிகரெட் புகையின் வளையங்களில்
சிக்கி மீளமுடியாது போனால்
நுரையீரல்
சாம்பல் கிண்ணமாகிப் போவது
நிச்சயம்