Author Topic: இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?  (Read 1030 times)

Offline Yousuf


வேண்டிய வடிகால்கள்
வீட்டிலேயே இருக்க
வேலிதாண்டிபோகும்
உத்தமிகளும்!

வகைவகையாய் பரிமாறியும்
பசியடங்காமல்
பலவீட்டில் பசியாரும்
உத்தமர்களும்.

உருப்படியான
உடல்களைக் கொண்டும்
ஊழைக் கொழுப்பெடுத்து
உழன்று புரழுது சாக்கடையில்!

ஒவ்வாத மனங்களுக் கிடையில்
ஓடவழியின்றி
ஊறி நாறுது தெருவரையில்!

அச்சானியில்லாமல் ஓடும்-இவர்களின்
அந்தரங்க வாழ்க்கை
அசிங்கத்தையே தேடியோடி
அடையும் வேட்கை!

வடிகாலின்றி ஓட நினைக்கும்
வாழ்க்கைக் கழிவுகளை-எங்கே
வடிப்பதென தெரியாமல் விழிப்பதே
இவர்களின் இழிநிலைந்த
அன்றாட வாழ்க்கை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.