Author Topic: சாக்லேட் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராது: ஆய்வாளர்கள் தகவல்!  (Read 1148 times)

Offline Yousuf

தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்கம் குறைவு என நிபுணர்களின் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சாக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது.

இதில் ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை கொண்டது.

எனவே சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் குறைவு என கூறினர்.

உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.