Author Topic: சுதந்திர தினம்  (Read 434 times)

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
சுதந்திர தினம்
« on: August 15, 2016, 01:10:37 PM »
நான்கடுக்கு பாதுகாப்பின்
நடுவில் ஏற்றப்படும்
தேசிய கொடி ...

காணாமல் போன
காந்தியும் சுபாஷும்
கொடிக்கம்பம் அருகில்
புகைப்படமாய்....

மிட்டாய் போயி லட்டு
வந்தது - அழுக்கு ஆடையுடன்
பெற்று கொண்ட சிறுமி...

சாலைவிதி மீறிய பயணம்..
இடைமறித்த காவலர்..
கையூட்டு பெற்று
கண்டும் காணாமல் போயினர்...

நாளிதழை பார்த்தால்
கற்பழிப்பு  செய்தி..
சமாதான புறாக்கள்
சத்தமின்றி இருக்கின்றன...

விழிப்புடன் எல்லைகாக்கும்
ராணுவ வீரர்கள்..
பாராளுமன்றத்தில்
தூங்கிவழியும் அரசியல்வாதிகள்...

சுதந்திரம் பெற்றது நள்ளிரவில்
அதனால்தான் என்னவோ
முழுமையான விடியல் நோக்கி
பயணம் இன்னமும் தொடர்கிறது...
சுதந்திர தின வாழ்த்துகள்
                 - கபிலன்