Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 113  (Read 5170 times)

Offline MysteRy

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 113
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Breeze அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:35:08 AM by MysteRy »

Offline MyNa

தோல்வியிலே துவண்டு போனவன் 
இடிந்து ஒடிந்து விடாமல்
தன் வாழ்க்கைச் சரித்திரத்தை
தானே வடிவமைக்க உளியொன்றை ஏந்துகின்றான் ..

அழுது வறண்டு போன கண்களோடு
உழைத்து காய்ந்து போன கைகளோடு
நடந்து தளர்ந்து போன கால்களோடு
வலிகள் பல இருந்தும் மனதில் உறுதி கொள்கின்றான் ..

தனக்கு விழுந்த ஒவ்வொரு அடியையும்
தான் கடந்து வந்த இன்னல்களையும்
அவன் மீண்டும் வான் நோக்கி எழுந்திட
அவற்றை எரிப்பொருளாய் மாற்றி முன்னேறுகின்றான்

இந்த பாதையும் எளிதானது அல்ல..
தூற்றுபவோர்  தூற்றி கொண்டேதான் இருப்பர்..
ஒடுங்கி ஒளிந்து வாழ்வதை விட
தினம் தினம் முயன்று மடிவதே மேல் ..

வாழ்க்கை எனும் சிற்பத்தை வடிவமைக்க
முயற்சி எனும் உளியை கையில் ஏந்தி
வலிகள் தாங்கி சாதனைப் படைப்போம்
நம் வாழ்க்கை நம் கையில்..
முயல்வோம் .. முன்னேறுவோம் !!

Offline thamilan

உன்னை விமரிசிக்கும் தகுதி
எவருக்கும் இல்லை
உன்னை எடைபோட எவருக்கும்
அருகதை இல்லை

உன்னைப் பற்றி உனக்குத் தெரியாததது
மற்றவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது
உன்னையே நீ அறிவாய்
என்று சொன்னவன் சாக்ரடீஸ்
ஏன் எதற்கு எப்படி
என்று கேட்டதால் தான்
சிலைவடிக்கும் சிற்பி சிந்தனை சிற்பியாக மாறினான்

மற்றவர்கள் உன்னை செதுக்க விடாதே
ஒவ்வொருவர் பார்வைகளும் 
ஒவ்வொரு கோணத்தில் இருக்கும்
உன்னில் அன்புள்ளவன் பார்வையில்
நல்லவனாக வல்லவனாகத் தெரிவாய்
உன்னில் நல்லெண்ணம் இல்லாதவனுக்கு
கெட்டவனாக வில்லனாகத் தெரிவாய்

எல்லோரையும் புறம் தள்ளு
உன் அறிவெனும் உளி கொண்டு
உன்னை நீயே செதுக்கிப் பார்
ஆத்திரம் அகங்காரம்
போட்டி பொறாமை
போன்ற தேவை இல்லாதவற்றை வெட்டி எறி
நல்லதையே பார்க்கும் கண்களை செதுக்கு
நல்லதையே கேட்கும் காதுகளை உருவாக்கு
நல்லதையே பேசும் வாயை உண்டாக்கு

நீ இறந்தாலும்
உலகத்தில் உயர்ந்து நிற்பாய்
சரித்திரம் உன் புகழ் பாடும்
         
« Last Edit: August 15, 2016, 12:49:42 PM by thamilan »

Offline JEE

கல்லிலே கலைவண்ணம் கண்டான்….’
சீர்காழி கோவிந்தராசன்  அய்யாவின்
கம்பீரக்குரலோசையில்   சிற்பியின்
சிறப்பை சிந்திக்காதோர் உண்டோ?


சிற்பியில் சிறந்த  புகழ்பெற்ற 
சிற்பியை  நினைவு சின்னமாக்கலாமல்லவா?
நினைவுச்சின்னமாக்கினான்.....

நவீன காலத்தில் மனிதன்
காலத்தால் அழிக்க முடியாத
நினைவு சின்னத்தை
நவீன எந்திரம் கொண்டு படைத்தான்.....

மனிதன் படைத்த கலைகளுள்
சிற்பக்கலையைவிட  சிறந்ததுண்டோ?  .
காலத்தால் அழிக்க முடியாத
நினைவு சின்னத்தை
எந்திரம் ஏதுமன்றி படைத்தான்.....

சிற்பியின் கையில் உள்ள கூர் உளி
சிற்பியின் பார்வையில்   என்னஉண்டோ 
சிதறாமல் அதனை படைக்கிறதே......

மானிடரிலும் கல் மனமுண்டோ?
கல் மனதை செதுக்கும் சிற்பியுண்டோ?

இரக்கமின்றி அன்றாடம் நடக்கும்
கல்மனமுளளோர்  செயல் கண்டீரோ?

சிறந்த சிற்பியாய் செயல் படு............
சிறந்த சிற்பிகள் வளரட்டும்......

Offline BreeZe



காணும் காட்சிகளை
கண்முன் கொண்டு வந்து நிறுத்துபவன்
ஓவியன்

சத்தங்களை எல்லாம் சீர்படுத்தி
நாதமாக உருவாக்குபவன் இசைக் கலைஞன்
கற்களுக்கு உயிர் கொடுத்து
காவியங்கள் படைப்பவன்
சிற்பி

உலகில் உள்ள கலைகளில்
பழமையான கலை சிற்பக்கலை
கவிஞன் எழுதுகோல் கொண்டு
காவியங்களை படைத்திடுவான்
ஒரு சிறு உளி கொண்டு
காவியங்களுக்கு உடலும் உயிரும் கொடுத்திடுவான்
சிற்பக் கலைஞன் 

வெறும் கல்
சிற்றபியின் கை பட்டு
கடவுளாகிறது
இன்னொரு கல் அவன் உளி பட்டு
கோவிலாகிறது

தன்னைத் தானே செதுக்கக் கூடிய
ஒவ்வொரு மனிதனும் சிற்பியே
மனிதனும் கல்லை போன்றவனே
சிலரது மனங்கள் கல்லை விட
கடினமாக இருக்கும்
தன்னை தானே செதுக்குபவன்
சிறந்த மனிதன் ஆகிறான்
அவனும் கடவுளைப் போல
காட்சி தருவான்   



பதிப்புரிமை
BreeZe


« Last Edit: August 15, 2016, 07:35:53 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
வாழ பிறந்தோம் தோழனே ....
சரித்திரம் படைக்க பிறந்தோம் ....
துன்பங்களும் தடைகளும் கண்டு
அஞ்சிடாதே தோழனே .......
மண்ணில் சரிந்திராதே தோழனே .....

எழுந்திடு  தோழனே ....
துன்பங்கள் பல வந்தாலும்
துவண்டிடாமல் எதிர்நீச்சல் கொண்டு
எழுந்திடு  தோழனே  ....

இன்றைய சோதனைகளைக் கடந்து
நாளைச் சாதனைகள் பல
படைத்திடு  .....
முயன்றிடு  தோழனே  .....

பெற்ற அவமானங்கள் உன்னை
வீழ்த்திடாமல்
இருந்திடட்டும் தோழனே ....
பொறுமையுடனும் மனஉறுதியுடனும்
சிந்தித்துச்  செயல்பட்டு
அவமானத்தையும்  வெகுமானமாய்
மாற்றிடு தோழனே .....

அச்சமில்லை அச்சமில்லை
என்று சொல்லிடு தோழனே ....
துச்சமாக உன்னை தூறுசெய்தவரிடம்
சாதித்து காட்டிடு தோழனே .....

புறம் பேசும் வாய்கள்
பேசட்டும் தோழனே ....
செவி மடுக்காமல் ...
உன் வழி நீ  சென்றிடு  தோழனே ....

நோக்கம் ஏதுவென்பதனை தீர்மானித்திடு ....
அதுவே இலக்கு என உறுதிச்
செய்திடு....
தடைகளைத்  தாண்டி இலக்கை
நோக்கி அடிமேல் அடிவைத்து
முன்னேறிடு தோழனே ....

வாழ்க்கையெனும் போரில்
உளியேனும் ஆயுதத்தைக்
கரதில்லேந்தி நிற்கின்றாய் தோழனே ....
வாழ்க்கையெனும் கல்ப்பாறைச்
சுழண்டுருக்கின்றது ....

துணிந்துப் போரிடு
வெற்றி நிச்சயம் உன்னுடையது
தோழனே......
உன் வாழ்க்கை உன் கையில்
அழகுற செதுக்கிடு தோழனே ....
உலகமே உன்னை போற்றிடும்
வென்று காட்டிடு தோழனே .....

மூச்சி உள்ளவரை முயற்சி
செய்திடு தோழனே ....
வானமும் வசப்படும் ....
நாளையே உலகம் உன்னுடையது ...
தலைமைத்துவம்
பெற்றிடு தோழனே ......

முயற்றின்மை தோழ்வியை
மட்டுமே வழங்கும் ....
முயற்சியுடன்  செயல்படுவோம்
சாதனைகள் புரிவோம் .....

நன்றி ......
~ !! ரித்திகா !! ~
« Last Edit: August 17, 2016, 03:53:01 PM by ரித்திகா »


Offline JerrY

சிற்பியும் உளியும்

உளியெடுத்து உயிர்கொடுக்கும் உழைப்பே,
கல்லெடுத்து சிலைவடித்த கலையே!
உன் கற்பனை மூலம்,

பல கடவுள்கள் -
இங்கே காட்சிபிழையாய் நிற்க..
பல தலைவர்கள் - உன்  உளியில்
இங்கே ஆட்சி பிழைகளாக நிற்க!

நீ கண் இமை செதுக்கும் காட்சி,
சிலந்தி வலை பிண்ணும் நேர்த்தி,
தூக்கனாங்குருவியின் பேய் -
பிடித்துருக்குமோ உன் விரல்களுக்கு??
உன் விரல்களில் சிலை பிரமிப்பு!!

பெண் எல்லாம் சிலையாக,
ஆண் எல்லாம் பிணமாக!
நீ அதிகார மூலையில் ஏறி
செதுக்கிய சிலை காலத்தின் நேர்த்தி!!
ஆம் பெண் கருத்தரிக்காவிட்டால்,
ஆண்கள் பிணங்களே!!!

நீ பாறையெடுத்து படைத்த பெரியகோவில் -
ஈசனுக்கே ஓர் வரலாற்று பிறப்பு!!

பளிங்கி கல் உடைத்து செதுக்கிய தாஜ்மகால்-
ஷாஜகான் மும்தாஜின் கனவு இல்லம்!!

பிணங்களுக்காய் பிடித்துவைத்த பிரமீடு - அந்த
பிணங்களுக்கே ஓர் பிரமிப்பு!!

தலைசாயாமல் சரிந்து நிற்கும் பைசா கோபுரம்-
உன் உளியில் விளிம்பில் நிற்கும் அதிசயம்!!

உன் விரலால் நீண்ட சீன பெருஞ்சுவர்-
பெரும் கட்டிடகலைக்கே ஓர் வரலாற்றுச் சாரம்!!

இவர்கள் எல்லாம் உளியால் உயர,
வருத்தம் இருவருக்கு மட்டும்??

அகத்தியர் போல் சிறு உளியாயிருந்து,
பலரின் வாழ்வை உயர்த்திய உளியே,

நீ மதிப்பு மிக்கவன் என்பதால் உனக்கொரு வேண்டுகோள்!

பிஞ்சு கைகளிடம் தஞ்சம் ஆகாதே!!
அந்த பாவம் உன்னை விடாது!!
குழந்தை தொழிலாளிகளாய் கேள்விக்குறியாய்,
அவர்கள் வாழ்க்கை உன்னால்???

பல்லிழிக்கும் பகல்பொழுதில்,
உன்னை விரலில் பிடித்து பாறை உடைக்கும்,
பாவப்பட்ட தினக்கூலிகளை உயர்த்த,
எனக்காய் அவர்களுக்கு,
இன்னும் ஓர் வரம் கொடு!!!

 இவன் ,

இரா.ஜெகதீஷ் ..

கால் மிதி கல்லும்
கலைப்பொருளாய் கண் தெறிய
உளி வலியை உணராவிடின்
உரு மாறாது உலகறிய!

தரம் பார்க்க தடம் பார்க்க
தன் நிலை தனை பார்க்க
அவனவன் கைகளிலே
ஆண்டவன் தந்த உளி!

உழைப்பென் பதறியாதவன்
விதி மீதே கதி என்பான்
சோதித்து பார் உன்னை
சோதனை நெருங்காது!


உழுதது விளையும் வரை!
உடுத்த கூட நினக்கவில்லை!
உழவனை பார்
கோவன கொடையாளன்!

சுத்தம் செய்யும் தொழிளாளி
சரீர சுத்தமும்! சாக்கடை முத்தமும்!
வண்டி இழுப்பவன்
வாழ்க்கை சக்கரம் ஓயா இயந்திரம்!

எத்தனை பேரிங்கே
கையில் உளியோடு
கண்மறைக்கும் வலி கடந்து
கஷ்டத்தை உடைத்தவர்கள்
கை கூப்புகிறேன் 🙏

சக்தி ராகவா

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
தலைக்கு மேல் இலவம்பஞ்சு - கடல்
தண்ணீரை போல பரந்து கிடந்தது ...

தங்க உளியை எடுத்து கொண்டு
தலைப்பாகையுடன் வந்தார் ஒருவர்
தட்டி பார்த்தார் தலையினை...
தறுதலை இதனை செதுக்க
தன்னால் முடியாதென்றார்....

வெள்ளி உளி எடுத்து கொண்டு
வெள்ளைக்கார துரை போல்   
விரைந்து வந்தார் ஒருவர்...
உற்று பார்த்தார் மெதுவாய்..
உதவாக்கரை இது செதுக்க
உருப்படியாய் ஒன்றுமில்லை
என்றார்....

இரும்பு உளி எடுத்து கொண்டு
இடைபெருத்து நடைசிறுத்து
இருமிக்கொண்டு வந்தார் ஒருவர்.....
நான்கு தட்டு தட்டிவிட்டு
நன்றாய் இது வராது
நான் போகிறேன் என்றார் !.....
சுத்தியுடன் உளியினை
அருகே விட்டு சென்றார் !!....

உருவமாய் மாறி உருப்படணும்னு
எனக்கும் ஆச
வந்தவரெல்லாம் என்னை
வாய்க்குவந்தபடி பேச..
கல்லுக்குள் மறைந்திருந்த நான் - தாழ்வாய்
எண்ணி மனம் கூச..
நெருடல் என்னை நெருங்கி தின்றது.....

புயல்காற்றோன்று தோன்றி புழுதியை கிளப்ப
இலவம்பஞ்சு விலகி நீலவானம் ஒன்று
இமைதிறந்த  கண்களில் தெரிந்தது.....
காட்சிப்பொருள் பிழையாய் கருதும்போது
கருத்துக்கள் கூட பிழையாகலாமே..
முடியுமென்று உள்ளத்தில் நினைத்தேன் !
நல்லுறுதியை மனதோடு பிணைத்தேன் !!

அனுபவமில்லை ஆயினும் - மெல்ல
உளி  எடுத்து உடலில் பொருத்தி
உயரமாக சுத்தியை உள்ளங்கையிலேந்தி
ஓங்கி அடித்தேன்..
உயிரில் வலித்ததை கண்ணீர் காட்டியது...
வலியை பெரிதாய் எண்ணினால்
வளர்ச்சிதான் வருமா ?

அடித்தேன் அடித்தேன் பலமாய் அடித்தேன்
அனுபவம் பெற பெற ஆழமாய் அடித்தேன்
என்னை நானே ஒரு சிலையாய் வடித்தேன்
சுத்தியலுடன் உளி சேர்த்து
அனுபவத்தையும் ஆயுதமாய் கொண்டு
அழகாயென்னை  அமைத்துக்கொண்டேன்....

ஏளனமாய் பேசியவர் கூட  இனி
என்னை பார்க்க வருவர் - வலிதாங்கிய
வளர்ச்சிக்கு என்னையே ஒரு பாடமாய்
மற்றவர்க்கும் கற்று தருவர் ! !......
                          - கபிலன்