லியோ உங்கள் விவாதத்தில் நானும் எனது கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
உங்கள் கேள்வி வெட்டியாக இருப்பது இதமா கஷ்டமா?
எனது வாதம் இதமே
உங்கள் வாதத்தில் யாரோ ஒரு வேலை இல்லாதவரை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேலை இல்லாதது கஷ்டமாக இருந்தெருந்தால் அவர் வேலை தேடிஇருந்திருப்பார் அது இதமாக இருந்ததால் தானே அவர் வேலை தேடவில்லை உங்கள் தலைப்பில் வெட்டியாக இருப்பதால் மற்றவர்களுக்கு இன்பமா துன்பமா என்று கேட்டிருந்தால் நீங்கள் சொன்ன கருத்துக்கள் சரியானதாக இருந்த்திருக்கும்.
வெட்டியாக இருப்பதனால் மற்றவர்களுக்கு கஷ்டம் தான் . ஆனால் அது தலைப்புக்கு அப்பாற் பற்ற விஷயம். வெட்டியாக இருப்பவனுக்கு அது இதமே
நாம் வருடம் முழுவதும் உழைக்கிறோம் ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஒரு நாள் விடுமுறையில் இருக்கும் போது அந்த நாள் எத்தனை ஆனந்தமாக இருக்கிறது? அந்த நாள் முழுவதும் தூங்கி எழும்பத் தோணுமே? நாள் முழுவதும் டிவி முன்னாள் உட்கார்ந்திருந்தாலும் அலுப்பு தட்டாதே. வெட்டியா இருந்தா ஆனந்தம் என்கிறதுக்கு இது ஒரு உதாரணம்.
வெட்டியா இருக்கிறது முதலில் கஷ்டம் தான். உடம்பு அதற்கு பழகிவிட்டால் அப்புறம் வேலை செய்வது தான் கஷ்டமாக இருக்கும். உழைப்பவனுக்கு உழைப்பின் அருமை தெரியும். சோம்பிக் கிடப்பவனுக்கு சோம்பலின் அருமை தெரியும்.
படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை, அதிகம் பழுத்த பழங்கள் உள்ள மரமே அதிக கல்லடி படுகின்றது! இது படித்தவர்களுக்கும் பொறுந்தும்! வேலையில்லா இளைஞனின் பசி சேர்ந்த இரவுகள், துணையில்லா மூப்பு போன்று வர்ணிக்கவியலா குரூரம் கொண்டவை.!
இது நண்பர் மாறன் சொன்ன கருத்தின் வரிகள்.
"படிக்காதவர்களுக்கு வாய்த்த மன நிம்மதி கூட வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பதில்லை"
இதற்கு காரணம் என்ன? படித்தவன் தனது படிப்புக்கு தகுந்த வேலையை எதிர்பார்க்கிறான். படிக்காதவன் எது கிடைத்தாலும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். படித்தவன் தனது தகுதிக்கு வேலை கிடைக்கும் வரை வெட்டியாக இருப்பதை விட்டு விட்டு கிடைக்கும் தொழிலில் தனது திறமையை காட்டலாம் தானே.
நம் நாட்டில் வேலைஇல்லா பஞ்சத்துக்கு முதல் காரணம். நமது படிப்பும் அந்த படிப்புக்கான வேலை தேடலுமே ஆகும். உதாரணத்துக்கு இன்றய இளைஞகர்கள் அநேகம் பேர் தேர்ந்தெடுப்பது தகவல் தொழில் நுட்பம் துறையை சார்ந்த படிப்பு தான். இருப்பது நூறு வேலைவாய்ப்புகள் அதற்கு ஆயிரம் பேர்கள் தகுதி பெற்றால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்?
உழைக்கணும் முன்னுக்கு வரணும் என்ற எண்ணம் இருந்தால் வழியா இல்லை உலகிலே.
நானும் கொஞ்ச நேரம் வெட்டியா இருந்து விட்டு மறுபடி வரேன்