Author Topic: ~ M.O.T.H.E.R ~  (Read 23288 times)

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #75 on: January 13, 2013, 01:32:12 PM »




குழந்தை கடவுள் தந்த பரிசு!
தாய் பரிசாக வந்த கடவுள்!

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #76 on: January 13, 2013, 01:34:09 PM »




குழந்தையிடம்
அம்மா சொல்லும்
முதல் பொய்;

பாதைசாரியை
''பூச்சாண்டி..''என்பதுதான்.

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #77 on: January 13, 2013, 01:35:52 PM »




ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த
மெத்தையில் படுத்திருக்கிறேன்
உன் இருக்கையில் மட்டும் தான்
தூங்கி இருக்கிறேன்.

அம்மா உனக்கு அவளவு பாரமாய்
இருந்தேன் என்றா?
பால் கொடுத்து என்னை வளர்த்தாய்
நீ தூக்கவே முடியாதளவுக்கு.

வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்.தோற்று போனால்
தேடி வந்து அணைக்க உன்னை தவிர யார் எனக்கு ..

ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் எனக்கு
நீ ஒரே ஒரு தடவை தலை கோதி விடும் போது..

எல்லாம் சேலைதான் என்றும் நீ ..
கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான
தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது
என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும்
என்ற ஆசையைவிட நான் விழுந்து
விடக் கூடாது என்ற தருனத்தில்தான்
இருந்தது உன் தாய்ப்பாசம்.

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #78 on: January 13, 2013, 01:37:50 PM »





அம்மா...(குட்டி கதை)

வகுப்பாசிரியை....
''உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்..?''

சிறுமி..

''நான்..;எனது அப்பா...;எனது அம்மா..;''

வகுப்பாசிரியை...

'''உங்கள் வீட்டில் உள்ள மூன்று பேரும் பிரித்துகொள்ள சொல்லி மூன்று ஆப்பிள் தருகிறேன்..உனக்கு எத்தனை ஆப்பிள் கிடைக்கும்..?''

சிறுமி...

''2 ஆப்பிள் டீச்சர்..''

வகுப்பாசிரியை..

''தப்பு...ஒன்றுதான சரி..''

சிறுமி ...

''இல்லை..டீச்சர்..அம்மாதான் அவளுடைய ஆப்பிளை எனக்கு கொடுத்துவிடுவாளே..''

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #79 on: January 13, 2013, 01:40:13 PM »





உன்மீதான
அத்தனைக் கோபங்களையும்
ஒற்றை நொடியில்
இல்லாதாக்கி விட்டான் ..
இறுகிப்போன பாறை
என்றிருந்த என்னை
நீ கவ்விய அதேவிதத்தில்
அவனின் ஒரு கவ்வல்..

வெறுக்கிறேனடா உன்னை
இன்னமும் தேடக்கூடாதென்று
வேகத்தில் வந்திவனை
பிரித்து எடுத்துவிடு ..
இன்னொருமுறை எனக்காய்
ஒரேயொருமுறை நீ
முயன்று பார்..
பிரிக்கமுடிகிறதா என்றே
தோற்றுப் போவாய் நிச்சயம் .

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #80 on: January 13, 2013, 01:41:29 PM »





அம்மா...
தீபாவளிக்கு என்ன வேணும்?
நீ பத்திரமா வீடு வரவேணும்...
அம்மா!!!
தி பிராண்டட் கிரேசி கேர்ள் எவர் ஐ சா இன் மை லைப்!!!!

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #81 on: January 13, 2013, 01:42:58 PM »





சின்னச் சின்னச் கற்களைப்
பொறுக்கி
கைவிரித்துக்காட்டி
“அம்மா காசு” என்று
பரவசப்படுவான்
குட்டி மகன்

அவன்
வெற்றுதாள்களைச் சுருள்களாக்கி
கூலாங்கற்களை கடலை என்றும்
மிட்டாய் என்றும்
எங்கோ பொறுக்கியதெல்லாம்
சரக்குகளாக்கி
இருக்கையறை மூலையில்
ஒரு கடையே ஆரம்பித்து
திறப்புவிழாவென்று
என்னையும் கூவியழைப்பான்

வைரங்கள் என்றெண்ணிய
சில நினைவுகள்
வெறும் கற்களாகிப் போனது
அறிந்திருந்தும்
மடிமடியாய் அள்ளிக்கட்டிய
கற்களை வைரங்களாக்கவே
எத்தனிக்கிறேன் நானும்

குட்டி மகனைப் போல..

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #82 on: January 13, 2013, 01:45:17 PM »





மரணம் கூட சுகமானதுதான்..
தாங்கி பிடிப்பது ,
என்னுடைய தாயின் மடியாக இருந்தால் !!

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #83 on: January 13, 2013, 01:49:06 PM »





நடை பாதையில்
மழையை சபித்து கொண்டு இருந்தாள்
ஓர் இளம் தாய் ...

தன் முந்தானையில்
குழந்தையை அணைத்தபடி

# இன்றைய மழை கவிதை

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #84 on: January 13, 2013, 01:50:44 PM »





அம்மாவின்
முந்தானையை
பிடித்து அடம்பிடிக்கும்
குழந்தையாய்...

இருக்கவே
மனம்
ஏங்குகிறது...

சுயம் இழக்காமல்..

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #85 on: January 13, 2013, 01:52:22 PM »





முதன்முதலாய் அம்மாவுக்கு ....வைரமுத்துக்கவிதை


ஆயிரம்தான் கவி சொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ ?
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோட
கருப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னன்னா நினைச்சுருப்ப ?
கத்தி எடுப்பவனோ ?
களவாடப் பிறந்தவனோ ?
தரணியாள வந்திருக்கும் ?
தாசில்தார் இவன்தானோ ?
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்த உன்னை
நினச்சா அழுகைவரும்
கதகதண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ணெய்
கலந்து தருவாயே
தொண்டையில அதுயிறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சிக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிருமிளகும்
சேர்த்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
குழகுழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுதத்தெரு மணமணக்கும்
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டேச் சமைச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்ம்புமேல
குட்டிக்குட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊரும்
வருமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செரிஞ்சேன் !
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே !
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே !
கல்யாணம் நான்செஞ்சு
கதியத்து நிக்கயிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசைமுகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே !
பாசம் கண்ணீரு
பழையக்கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே !
வைகயில ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேற பிள்ளை உண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா ?

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #86 on: January 13, 2013, 01:54:42 PM »





தாய்மையைப் போல்
எதுவும் அழகில்லை
இவ்வுலகில்...

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #87 on: January 13, 2013, 01:56:05 PM »





இன்னமும் என்னை அவள்
இறக்கிடவில்லை மனதிலிருந்தே
என்தாயின் அருகாமை ..
அது ஒன்றே போதும்
பாறைகூட மலர்தொட்டிலே ..

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #88 on: January 13, 2013, 01:58:55 PM »





என்னை எனக்காய் ரசித்தவள்

எனக்கோர் கவி எழுத ஆசை...
மனமோ தை தை எனக் குதிக்கிறது..
காணாததைக் கண்டதுபோல் ...
உன்படம் கண்ணில் வீழ்ந்த நொடியில் ..

வாய்மொழிந்ததோ அம்மா அம்மா அம்மா..
ஒற்றைச்சொல் .. ஒரு நபர் ..ஓர் உலகம்
அம்மா என் அம்மா..
சிரிக்க மட்டும் தெரிந்த என் அம்மா..

அம்மா என்றால் அன்பு ..
நீ கற்றுத் தந்ததில் தானே நான்
என் உலகை வெல்கிறேன் ..
உனக்குப் பின் தானே ஆசான் வருகிறார்

இல்லை என்ற வார்த்தை
உன் அகராதியில் இருந்ததுண்டா ..
இன்று இருப்பவை எல்லாம்கூட ..
இல்லாதது போன்றே தோற்றம் ...

குதர்க்கம் காண்கையில் கேட்கையில்
அடித்து அமர்த்த ஆசை தான் ...
நீ கற்றுத் தந்தது வேறு விதமாய்..
அன்புடன் அரவணைத்துச் செல்ல..

அரவணைத்தே செல்கிறேன்
உன்னின் ஓர் அம்சம் .. சிறு துளியேனும்
அவர்களிடமும் காண்பதனால் தான் ...

Online MysteRy

Re: ~ M.O.T.H.E.R ~
« Reply #89 on: January 18, 2013, 05:51:35 PM »