Author Topic: இமைகளின் சுமை  (Read 3368 times)

Offline Global Angel

இமைகளின் சுமை
« on: July 19, 2011, 03:47:40 AM »

இமைகளின் சுமை

இமைகளின் சுமைகளை
இறக்கிக்கொண்டு
இருக்கின்றேன்
முடியவேயில்லை
ஆனால் வடிந்து விட்டது ...!

என் விழிகள்
வறண்டுவிட்டன...?
பாலைவனக்
கானல் நீர் போல்
தூரத்து நம்பிக்கை
துரத்துகிறது...!
வலிகள் தான்
வாழ்க்கைத்துணை ...?!
இடிபாடுகளுக்கிடையில்
இதயம் ...!?
விடியல்கள் மடிந்து
கொண்டு இருக்கின்றன...!?
சுகங்கள்
சொல்லாமலே செல்கிறது
சாவுக்கு வந்ததைப்போல்...!?
உணவு
உறுத்தலாகவே இருக்கிறது ...!?
நினைவு
நடுக்கத்தின் சதுக்கத்தில்
அலைந்து கொண்டிருக்கிறது ...!?
இரவு உணர்வுகளை
கொறித்துக் கொண்டிருக்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய் ...!?
தவிப்பு
களிப்பில் கூத்தடிக்கிறது ...!?