காலம் தோறும் மனதில்
என்னை சுமக்கும் உன்னை
என் நெஞ்சில் சுமக்க
விரும்புகிறேன் .....
என் விழி சுருக்கத்தையும்
தாங்க இயலாத உயிரே....
என் உயிரினில் கலந்துவிடு....
உன் கவலைகளை
மறக்க என்
தோல் தருகிறேன் ....
ஆயுள் முழுவதும் சாய்ந்து
கொண்டாலும் தாங்கிக்கொள்கிறேன் ....
கையேடு கை கோர்த்து
கொள்....
பிரியும் நிலை வந்தால் ....
பிரியாமல் அணைத்துக்கொள்கிறேன் ....
வலிகளையும் மறந்து
விழி மலர்ந்து சிரிப்பேன்
உன் மனம் குளிரும் என்றால்...
தோழியாக கரங்களில்
உன்னை சுமக்கிறேன்
தாயாக இரு விழிகளில்
உன்னை சுமக்கிறேன்
துணைவியாக
இறுதி மூச்சி வரை
என் மனதினில் சுமக்கிறேன் ....
நான் விழி மூடும்
நேரம் உன் கரங்களுக்குள்
சிறைச் செய்து கொள்....
உன் மடியினில் சாய்த்து கொள் ...
கண் கலங்காமல் புன்னகை
பூத்த விழிகளுடன்
என்னை வழி அனுப்பிவை
என் உயிரே .....!!!
உயிர் பிரியும் நொடியிலும்
உ ன்முகம் வாடுவதை
என்னால் காண இயலாது
என் அன்பே .!!!....
அலைக்கடலாக மோதும்
உன் அன்பினில் நானும்
திணறித்தான் போனேன் ....
உன் பாசத்திற்கு நான்
அடிமையும் ஆனேன் .....
~!! ரிதிகா !!~