Author Topic: ~ தினை ரவா தோசை ~  (Read 320 times)

Offline MysteRy

~ தினை ரவா தோசை ~
« on: August 02, 2016, 10:11:26 PM »
தினை ரவா தோசை



தேவையானவை:

தினை ரவா – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
தயிர் – ஒரு கப்
தண்ணீர் 2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு – 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
—————–

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.
இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.