மாற்றான் தோட்டத்து
மல்லிகையைப் போல
அடுத்தவர் கவிதைகளும் மணக்கும்
சுட்டால் பொன் சிவக்கும்
சுட்டாலும் கவிதை சிறக்கும்
மற்றவரை வழியை நாம்
பின்பற்றலாம்
ஆனால் நம் காலால் தான்
நடக்க வேண்டும்
நீ நீயாக இருக்கும் வரை தான்
உனக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்
நீ வாடைகை வீட்டில் குடியிருப்பதனால்
அது உனது சொந்த வீடாகாது
களிமண் வீடானாலும்
உனக்கென்று ஒன்றிருந்தால்
அது தான் உனக்குப் பெருமை
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்சி ஒரு பயிற்ச்சி
முயற்சி என்று ஒன்றிருந்தால்
கவிதை என்ன காவியமும் வரையலாம்