Author Topic: ~ தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள் ~  (Read 1155 times)

Online MysteRy

தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்

தோட்டம் வைப்பது என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. அத்தகைய பொழுதுபோக்கு நிறைய பேருக்கு உள்ளது. தற்போது தோட்டம் இல்லாத வீடுகளை காண்பதே அரிது. ஏனெனில் நிறைய பேர் தோட்டம் வைப்பதில் மிகுந்த ஆர்வம் காண்பிக்கின்றனர். அவ்வாறு ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, தோட்டத்தில் எந்த மாதிரியான செடிகளை வைக்கலாம், அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பன பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தோட்டம் வைத்தப் பின் செடிகளை சரியாக பராமரிக்காவிட்டால், பின் அது வாடி இறந்துவிடும்.

மேலும் தோட்டத்தில் எத்தனையோ வகை வகையான செடிகள் வளர்த்தாலும், இந்தியாவின் காலநிலைக்கேற்ப வளரக்கூடிய செடிகள் என்று சில உள்ளன. ஏனெனில் சில செடிகளுக்கு சரியான ஈரப்பதம் மற்றும் அளவான வெப்பநிலை மட்டும் தேவைப்படும், சில செடிகள் எந்த காலநிலையிலும் வளரக்கூடியதாக இருக்கும். அதிலும் இந்தியாவின் வெதுவெதுப்பான காலநிலைக்கு ஏற்ப நன்கு வளரும் செடிகளை பெரும்பாலான வீடுகளில் வளர்க்கின்றனர்.

அத்தகைய செடிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்கள் வீட்டிலும் வைத்து வளர்த்து மகிழுங்கள்.




துளசி



இந்தியாவின் பெரும்பாலான தோட்டத்தில் வளர்க்கும் செடிகளில் துளசியும் ஒன்று. இதனை கடவுளாக மதித்தும் சிலர் வளர்க்கின்றனர். இத்தகைய செடிக்கு போதுமான நீர் அவசியம். மேலும் இதற்கு நேரடியான சூரியஒளியை விட, நிழலில் வெதுவெதுப்பான நிலையில் நன்கு வளரும்.

Online MysteRy

சாமந்தி



பூஜைக்கு பயன்படுத்தும் சாமந்தி செடியையும் தோட்டத்தில் வளர்ப்பார்கள். இதற்கு கருப்பு மண் மற்றும் பிரகாசமான சூரியஒளி மிகவும் அவசியம்.

Online MysteRy

மணி பிளாண்ட்



வீட்டில் எளிதில் வளர்க்கக்கூடிய செடிகளில் மணி பிளாண்ட் முக்கியமானது. அதற்கு இந்த செடியின் சிறிது தண்டுடன் கூடிய இலையை செடியிலோ அல்லது மண்ணிலோ புதைத்து வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம், மேலும் இதற்கு அதிகப்படியான தண்ணீர், சூரிய வெளிச்சமில்லா இடத்திலும் வளர்க்க வேண்டும்.

Online MysteRy

செம்பருத்தி



இந்தியாவில் தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகளில் செம்பருத்தி பிரபலமானது. இதற்கும் செடியின் சிறு பகுதியை வைத்தாலே நன்கு எளிதில் வளரும். இந்த செடிக்கு நிறைய சூரியவெளிச்சமும், ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரும் ஊற்ற வேண்டும்.

Online MysteRy

ரோஜா செடி



இந்தியாவில் மிதமான குளிர்காலம் ஆரம்பிக்கும் போது வளரும் செடிகளில் சிறந்தது ரோஜா செடி. அதற்கு கோடைகாலம் முடியும் நேரத்தில், ரோஜா செடியின் தண்டை மண்ணில் புதைத்து, வளர்த்து வந்தால், ரோஜா செடியானது குளிர்காலத்தில் அழகாய் பூத்துக் குலுங்கும். இதுவும் இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கும் செடிகளுள் ஒன்று.

Online MysteRy

மல்லிகை



மல்லிகையானது கொடியானது நன்கு கொத்தாக, பச்சை நிற இலைகளின் இடையே ஆங்காங்கு வெள்ளை நிற பூக்கள் பூத்துக் குலுங்கும். இந்த கொடியை, நேரடியான சூரிய வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்து, அளவான தண்ணீரை ஊற்றி வளர்த்தால் போதும்.

Online MysteRy

வாழைமரம்



பொதுவாக வாழைமரத்தை இந்தியாவில் ஒரு குழந்தை போன்று வளர்ப்பார்கள். மேலும் இந்த வாழைமரத்தை வீட்டில் வைப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதாலேயே பலர் இதனை வீட்டில் வளர்க்கின்றனர்.

Online MysteRy

போகெய்ன்வில்லே (Bougainvillea)



இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் இந்த செடியை வீட்டின் முன் வைத்து,, வீட்டை அலங்கரிக்கும் விதமாக வளர்ப்பார்கள். இது ஒரு குறுந்தாவரம். இதற்கு அவ்வளவாக தண்ணீரானது தேவைப்படாது. இதன் பூக்களைப் பார்த்தாலே பேப்பர் போன்று தெரியும்.

Online MysteRy

சூரியகாந்தி



வருடம் முழுவதும் நன்கு வளரும் பூச்செடிகளில் சூரியகாந்தி முக்கியமானது. அதிலும் இந்த சூரியகாந்தி பூவின் நடுவே உள்ள விதைகளை தோட்டத்தில் போட்டால், அவை நன்கு செழித்து வளரும். மேலும் இதற்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாக ஊற்றிவிட வேண்டாம்.

Online MysteRy

தாமரை



சில வீடுகளில் தாமரையை வளர்ப்பார்கள். இது எளிதில் வளரக்கூடியது. இது தண்ணீரில் வளரக்கூடிய ஒரு நீர்த்தாவரம்.