Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் ~ (Read 332 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226708
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் ~
«
on:
July 22, 2016, 03:01:51 PM »
ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
* தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
* தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.
* சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
* செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
* தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
* இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
* தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
* கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் ~