Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? ~ (Read 1040 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222687
Total likes: 27669
Total likes: 27669
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? ~
«
on:
July 20, 2016, 09:05:56 PM »
வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?
சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை.
* வாஷிங்மெஷின்-.
உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால் வம்புப் பிரசாதமாகி, ஏண்டா வாங்கினோம் என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.
* இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் ‘ஸ்ரீசர்வீஸஸ்’ என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை என்று நீங்களே சொல்வீர்கள்! என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.
** எப்படித் தேர்ந்தெடுப்பது?
* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது;
அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை;
நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.
* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.
*அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.
* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
*** என்ன விலை மெஷினே?
* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.
* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன.
4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.
* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள்.
செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்’ செய்ய வேண்டும். துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்- துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.
* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.
* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ? குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ? செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.
* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.
* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.
* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.
* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.
*** பயன்படுத்துவது எப்படி?
* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.
* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ணீரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.
* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.
* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.
* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.
இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.
* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.
* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.
* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ‘ஃபஸ்ஸி லாஜிக்’ என்று பெயர்.
மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு ‘நியூரோ ஃபஸ்ஸி’ என்று பெயர்.
இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.
* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும். *** “வாழ்க வளமுடன்”
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? ~