Author Topic: ~ பிஸ்தா ஐஸ் ~  (Read 353 times)

Offline MysteRy

~ பிஸ்தா ஐஸ் ~
« on: July 19, 2016, 11:29:24 PM »
பிஸ்தா ஐஸ்



தேவையான பொருட்கள்

பால் – 3 கப்
பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள்
சர்க்கரை – ¼ கப்
பிஸ்தா – 20

செய்முறை

பாலை கொதிக்க வைக்கவும்
பாலின் அளவு சிறிது குறையும் வரை சிம்மில் வைக்கவும்
பின்பு பாலை நன்கு ஆற வைத்து அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்
பிஸ்தா எசென்ஸ் சேர்க்கவும் நன்கு கலக்கவும்
அதனை தனியே வைக்கவும்
பின்பு பிஸ்தாவை எடுத்துக் கொள்ளவும்
அவற்றை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனை பாலுடன் சோ்க்கவும்.
நன்கு கலக்கவும்
பின்பு அதனை ஐஸ் கிரீம் அச்சுகளில் விடவும்
பின்பு அதனை அலுமினியம் ஃபாயிலால் மூடவும்
ஒரு கத்தியால் துளையிட்டு அதன் மீது ஜஸ் கிரீம் குச்சியை செருகி பின்பு 8 மணி நேரம் ஃபரீசரில் வைக்கவும்
அதன் பின் அதனை வெளியே எடுத்து ஐஸை கவனமாக அச்சிலிருந்து வெளியே எடுக்கவும்
பிஸ்தா ஐஸ் ரெடி!!