Author Topic: ~ புத்துணர்ச்சி தரும் மசாலா டீ ~  (Read 332 times)

Offline MysteRy

புத்துணர்ச்சி தரும் மசாலா டீ



தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்,
தண்ணீர் – 1 கப்,
தேயிலை தூள் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பட்டை – 1 சிறிய துண்டு,
இஞ்சி – சிறிய துண்டு,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை – சுவைக்கேற்ப.

செய்முறை :

* ஏலக்காய், இஞ்சி, பட்டை, சோம்பை ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும்.
* பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டி வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன் தேயிலை தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்து மசாலா நன்றாக தண்ணீரில் இறங்கியவுடன் பாலை சேர்த்து, சிறு தீயில் 10 நிமிடம் நன்கு கொதித்த பின், இறக்கி வடிகட்டவும்.
* சர்க்கரை கலந்து பருகவும்.
* புத்துணர்ச்சி தரும் மசாலா டீ ரெடி.
* காலையில் புத்துணர்ச்சியுடன் வேலையை தொடங்க நினைப்பவர்கள் இந்த மசாலா டீயை குடித்து விட்டு வேலையை தொடங்குங்கள்.