Author Topic: ~ தட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்! ~  (Read 685 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226712
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்!



Gym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற்றை பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்களுக்காக 5 உடற்பயிற்சிகளை இங்கே தருகிறோம், இவை நிச்சயம் உங்கள் கனவை நிறைவேற்றும்.

இருந்தெழும்புதல்
இது மேல் வயிற்றுக்கு மிக நன்மையான பயிற்சியாகும். செய்ய வேண்டியது யாதெனில் உங்கள் கைகளை காதுக்கு நேராக பிடித்த வண்ணம் தரையில் நேராக இருத்தல் வேண்டும்.
மெதுவானக முழங்காலை வளைத்து பாதத்தை நேராகக் கொண்டு வரல் வேண்டும்.
பின்னர் தோள்களை உயர்த்தி மீண்டும் எழும்புதல் வேண்டும். இதன் போது உங்கள் முகம் மேல் நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பழைய நிலைக்கு மீளும் போது உள்ளெடுத்த வளியை வெளியேற்றுங்கள்.
இதை மீண்டும் மீண்டும் நாளொன்றுக்கு 15 – 25 தடவை செய்துவாரங்கள், சீக்கிரம் தட்டையான வயிற்றை பெறுவீர்கள்.
இடுப்பை திருப்புதல்
இது பெருமளவு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை விரட்ட உதவுகிறது.
இங்கு செய்ய வேண்டியது உங்கள் இடுப்பு மட்டத்தில் உடலை திருப்ப வேண்டும்.
அதாவது உங்கள் வலது முழங்கையால் இடது முழங்காலையும், இடது முழங்கையால் வலது முழங்காலையும் தொட வேண்டும்.
இதனை 10 – 15 தடவை செய்து வாருங்கள்.
இடுப்பை உயர்த்துதல்
கைகள் பக்கவாட்டில் இருக்கத்தக்கவாறு காலை நீட்டியபடி தரையில் அமருங்கள்.
கைகளில் அமுக்கத்தை கொடுத்தவாறு கால்களை 90 பாகையில் பேணியபடி இடுப்பை உயர்த்துங்கள்.
பின்னர் பழைய நிலைக்கு திரும்புங்கள். அதனை 15 – 20 தடவை செய்து வாருங்கள்.
பாதத்தை கைகளால் தொடுதல்: தரையில் காலை நீட்டி அமர்ந்தவாறு கைகளை தலைக்கு மேல் உயர்த்துங்கள்.
உடலை மடித்து கைகளால் பாதங்களின் நுனியை தொடுங்கள்.
இதை 20 தடவை செய்து வாருங்கள்.
படுத்தவண்ணம் கால்களை உயர்த்துங்கள்
தரையில் வலது பக்கம் படுத்தவாறு முழங்கையை ஊண்டிய வண்ணம் கால்களையும், இடுப்பையும் உயர்த்துங்கள்.
இது போன்று மற்றைய பக்கம் திரும்பி செய்தல் வேண்டும்.
இதை 10 – 15 தடவை பின்பற்ற வேண்டும்.