Author Topic: ~ ராகி சேமியா உப்புமா ~  (Read 494 times)

Offline MysteRy

~ ராகி சேமியா உப்புமா ~
« on: July 18, 2016, 11:56:11 PM »
ராகி சேமியா உப்புமா



தேவையான பொருட்கள்

ராகி சேமியா – 200 கிராம்
நீர் – 1.5 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
காரட் – 1
பீன்ஸ் – 6
குடை மிளகாய் – ½
உப்பு – தேவையான அளவு
மல்லித் தளை – 3
தாளிக்க
ஆலிவ் ஆயில் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
சேமியாவை எடுத்துக் கொள்ளவும்
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
பின்பு காடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உழுத்தம் பருப்பு மற்றும் கறி வேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
பெருங்காயம் சேர்க்கவும்
வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு பச்சை மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு உப்பு சேர்த்து காய்கறிகளின் பச்சை வாசம் போகும் நன்கு கிளறவும்
பின்பு சேமியா சேர்த்து சிறிது நேரம் நன்கு கிளறவும்
அவ்வப்போது சிறிது சிறிதாக நீரை தெளித்து விடவும்
மிதமான தீயில் வேக வைக்கவும்
பின்பு சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்
பின்பு மல்லித் தளை தூவி நன்கு கிளறவும்
பின்பு பரிமாறவும்