Author Topic: ~ உருளை கிழங்கு மசாலா சாப்ஸ(marathi style) ~  (Read 388 times)

Offline MysteRy

உருளை கிழங்கு மசாலா சாப்ஸ(marathi style)



தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு – அரை கிலோ
கொத்த மல்லி – இரண்டு மேசைக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
வத்தல் மிளகாய் – ஐந்து
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – பத்து பற்கள்
கடலை எண்ணெய் (or)
தேங்காய் எண்ணெய் – கால் கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஏலக்காய் – இரண்டு
பட்டை கறுவா – சிறிதளவு
கிராம்பு – இரண்டு
பிரியாணி இலை – ஒன்று

செய்முறை:

உருளை கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து போர்க்(Fork) முள்ளுகரண்டியால் சிறிய ஓட்டைகள் போட்டு கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, மிளகு, மல்லி, மிளகாய் வற்றல்,பட்டை,ஒரு கிராம்பு எல்லாவற்றையும் பச்சையாக வறுக்காது பசையாக அரைத்து கொள்ளவும்.
உருளை கிழங்கை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு கலவையை சேர்த்து உருளை கிழங்கு உடையாமல் மெதுவாக பிரட்டி கால்மணி நேரம் ஊறவிடவும்.
பசையாக அரைத்துவைத்திருக்கும் மசாலா கலவையை உருளை கிழங்கில் சேர்த்து பிரட்டி விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி கறுவா பட்டை, கராம்பு , ஏலம் சேர்த்து வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து உருளைகிழங்கை சேர்க்கவும்.
மிதமான சூட்டில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
உருளை கிழங்கு லேசாக வறுபட ஆரம்பித்ததும் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பொடியாக்கி வைத்த மசாலா பொடி, கொத்தமல்லி இலை தூவி மூடி வைத்து மூன்று நிமிடங்கள்வரை கொதிக்க வைத்து பரிமாறவும்.
சுவையான மராத்தி உருளைக் கிழங்கு மசாலா தயார்.
இதனை சாதம் மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் சுவையாக இருக்கும்