Author Topic: ~ இடியாப்பம் மற்றும் முட்டை வறுவல் ~  (Read 365 times)

Offline MysteRy




இடியாப்பம் தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) – 1 தேக்கரண்டி
எண்ணெய்

இடியாப்பம் – செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். அதோடு உப்பு சிறிது எண்ணெய் ஆகியவை சேர்க்கவும். அரிசி மாவோடு வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு பிசையவும். ஒரு இடியாப்ப குழலில் மாவை நிறைத்து (சேவ் நாழி) இடியாப்பம் செய்யும் பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து இடியாப்பத் தட்டில் இடியாப்பத்தை பிழிந்து விடவும். அதன் மீது சிறிது தேங்காய் துருவலைத் தூவ வேண்டும். பின்னர் அந்தத் தேங்காய் துருவலுக்கு மேலும் சிறிது இடியாப்பத்தைப் பிழிந்து விட்டு, மூடி வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
இப்போது மென்மையான இடியாப்பம் பரிமாற தயாராக உள்ளது. இதனோடு சேர்த்து உண்ண முட்டை வறுவல் ஏற்றது.

முட்டை வறுவலுக்கு தேவையான பொருட்கள்

அவித்தமுட்டை -4
வெங்காயம் (நறுக்கியது) -2 கப்
பச்சை மிளகாய் -5
தக்காளி (நறுக்கியது)- 2
மிளகாய் வற்றல் பொடி -1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
கடுகு

முட்டை வறுவல் – செய்முறை

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அதோடு கரிவேப்பிலை மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவும். பின்னர் அதோடு ஒரு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி அதோடு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் கொத்தமல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றி அதோடு உப்பு, மற்றும் தக்காளியை சேர்த்து மூன்று நிமிடங்கள் வேக விடவும். வெந்ததும் வேக வைத்த முட்டையைப் போட்டு மறுபடியும் மூன்று நிமிடங்கள் வேக விடவும். இன்னும் சிறிது நீர் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது முட்டை வறுவல்  தயார்.
முட்டை வறுவலை கொத்தமல்லி இலைத்தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.