கனவுகள் தோறும் வந்தாய்...
கவிதைகள் நூறு தந்தாய்...
காதலை கண்ணில் விதைத்தாய்...
உன் கண்கள் கொண்டு வதைத்தாய்...
வளர்பிறை அன்பினை தந்தாய்...
இளம்பிறை என்னை நெய்தாய்...
மரணம் வரை தொடர்வதாய்
மனதில் எண்ணம் விதைத்தாய்...
உயிரான உந்தன் வரவுக்காய்....
மகிழ்வுடன் நானும் காத்திருந்தேன்...
எனைத் தேடி நீயும் வரவில்லை...
என் கவலை விடுதலை பெறவில்லை...
இருந்தும் உன் மேல் கோபமில்லை...
விலகி செல்ல விரும்பவில்லை....
இன்னொரு ஜென்மம் காத்திருப்பேன்...
ஏமாற்றாமல் வந்துவிடு...