Author Topic: ~ கொய்யா ஸ்குவாஷ் ~  (Read 558 times)

Offline MysteRy

~ கொய்யா ஸ்குவாஷ் ~
« on: July 14, 2016, 10:16:19 PM »
கொய்யா ஸ்குவாஷ்



தேவையானவை:

கொய்யா பழம் – 1/2 கிலோ.
சர்க்கரை – 200 கிராம்.
எலுமிச்சம் பழம் – 1.
கோவா எசன்ஸ் – 4 துளிகள்.
தண்ணீர் – தேவையான அளவு.
உப்பு – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

500 மி. லி தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க விட்டு, ஆற விடவும். 100 மி. லி தண்ணீரில் தோலெடுத்து நறுக்கிய பழங்களைப் போட்டு, நன்கு வேக விடவும்.
பிறகு நன்கு மசித்த பழ விழுதை எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை சிரப்பில் கலக்கவும். மீதமுள்ள தண்ணீர் எலுமிச்சைச் சாறு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டி, குளிர வைக்கவும்.