Author Topic: ~ அரைத்துவிட்ட பூண்டு ரசம் ~  (Read 404 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226280
  • Total likes: 28760
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அரைத்துவிட்ட பூண்டு ரசம்



தேவையானவை:

துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை:

துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.