Author Topic: ~ மெது போண்டா ~  (Read 370 times)

Offline MysteRy

~ மெது போண்டா ~
« on: July 14, 2016, 09:16:28 PM »
மெது போண்டா



தேவையானவை:

கடலை மாவு – 1 கப், டால்டா – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, முந்திரிப்பருப்பு – 6, ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.