Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாய், பூனையால் வரும் ஆஸ்துமா அபாயம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நாய், பூனையால் வரும் ஆஸ்துமா அபாயம் ~ (Read 334 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226708
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நாய், பூனையால் வரும் ஆஸ்துமா அபாயம் ~
«
on:
July 13, 2016, 09:22:49 PM »
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா எனும் நோய் காற்றுக் குழாய்களை பாதிப்பது. இதனால் நுரையீரலுக்கு செல்ல வேண்டிய, வெளி வர வேண்டிய காற்று பாதிப்படைகின்றது. இந்த நிலை அடிக்கடி ஏற்படும் பொழுது ஆஸ்துமா எனப்படுகின்றது. காற்றுக் குழாய்கள் வீக்கம் அடைந்து காற்றுப்பாதை சுருங்குகின்றது. இதனால் மூச்சின் சத்தம் அதிகமாய் கேட்கின்றது.
இந்த பாதிப்பின் காரணம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். காற்றின் மாசு, விலங்குகளின் மாசு, அதிகமான வாசம், சிறு பூச்சிகள், கரப்பான்கள், நுரையீரலை பாதிக்கும் கிருமிகள், அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி என பல காரணங்கள் இருக்கும்.
அடிக்கடி மூச்சு வாங்குவதும், விசில் அல்லது இளுப்பு சத்தம் போன்ற மூச்சும் இருந்தால் ஆஸ்துமா பரிசோதனை செய்து கொள்ளவும். முதலில் சொன்னது போல் மாசு அலர்ஜி அல்லது சளி, ஜூரம், கடும் குளிர் போன்றவை இதன் காரணமாகின்றன.
* இருமல்
* மூச்சு வாங்குதல்
* நெஞ்சு இறுக பிடித்தது போன்ற உணர்வு
* சத்தமான மூச்சு
போன்றவை உறுதியான அறிகுறிகள்.
சிலருக்கு புல்வெளி, பூக்களின் பக்கம், வயல், மரங்களின் பக்கம் போனால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும். செல்லப் பிராணிகளுடன் விளையாடுதல், தூசியின் பூச்சிகள் சுத்தமில்லாத மெத்தை, பாய், தரை விரிப்பு, கார் பெட் இவற்றின் மூலம் பாதிப்பு ஏற்படும். சென்ட், ரசாயனப்புகை, புகை இவற்றின் மூலம் அநேகருக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. கடும் உடற்பயிற்சி, ஜாக்கிங் போன்றவை பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
அதிக காற்று, வறண்ட சீதோஷணநிலை, அதிக ஈரப்பதம், குளிர் காலம் இவற்றால் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். இந்த ஆஸ்துமாவிற்கு முழு நிவாரணம் கிடையாது என்றும் நல்ல சிகிச்சையும் பாதுகாப்பு முறையும் ஒருவரை இயல்பான வாழ்க்கை வாழ வைக்க முடியும்.
ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் பொழுது எப்படி இருக்கும்?
* காற்றுக் குழாய் சுருங்கும்.
* குறைவான காற்றின் ஓட்டமே இருக்கும்.
* காற்றுக் குழாய் வீங்கும்.
* குழாய்களில் திரவ சுரந்து காற்றின் ஓட்டத்தினை மேலும் தடைபடுத்தும்.
பல நேரங்களில் காற்று நுரையீரலுக்கு செல்ல முடியாது போகும். இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். இது ஆபத்தானது. உடனடியாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். பல நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு சிறியதாக, சற்று கூடுதலாக இது போன்று இருக்கக் கூடும். பல நேரங்களில் நுரையீரலில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் இருக்கும். இதுவும் உடலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.
சிறிய நிலையோ, பெரிய நிலையோ மருத்துவ உதவி அவசியம். ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. இல்லையெனில் அன்றாட வாழ்க்கை முறை பெரிதும் பாதிப்படையும். கட்டுப்படுத்தப்படவில்லையெனில் மாதவிடாய் உள்ள பெண்களுக்கு 10 – 22 நாட்கள் அவர்களது மாதவிடாய் சுழலில் பாதிப்பு கூடுதலாய் இருக்கும்.
குழந்தை பருவத்திலிருந்தே சிலருக்கு ஆஸ்துமா இருக்கக்கூடும். பரம்பரை ஜீன்ஸ் காரணமாக இது இருக்கலாம். 20 வயதிற்கு பிறகு சிலருக்கு இப்பாதிப்பு ஏற்படுவது உண்டு. இவற்றில் 50 சதவீதம் அலர்ஜி காரணமாக ஏற்படுபவை. மற்றவை வாழும் சூழ்நிலை காரணமாக ஏற்படுபவை.
அதிக உழைப்பு, உடற்பயிற்சி காரணமாக மட்டும் ஏற்படுவது ஒரு வகை. பொதுவில் உடற்பயிற்சியின் காரணமாக ஏற்படும் பாதப்பில் உடற்பயிற்சி இல்லாத மற்ற எந்த சூழ்நிலையிலும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மற்ற காரணங்களுக்காக ஏற்படும் ஆஸ்துமா பாதிப்பில் 80 சதவீத நபர்கள் உடற்பயிற்சியின் போதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இருமலால் துன்பப்படும் ஆஸ்துமா பல காரணங்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, சைனஸ் தொல்லை போன்ற காரணங்கள் இதை அதிகரிக்கும். இரவு, பகல் என எப்பொழுது வேண்டுமானாலும் இந்த இருமல் தொந்தரவு கொடுக்கும்.
பாதி இரவிலிருந்து காலை 8 மணி வரை சிலருக்கு திடீர் பாதிப்பு ஏற்படும். அதுவும் 2-4 வரை அதிகம் இருக்கும். முறையான சிகிச்சை இல்லாதவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படும். அதிக எடை உடையவர்கள், கர்ப்பிணிகள், அதிக மன உளைச்சல் உடையவர்கள், பரம்பரை ஆகிய காரணங்களாலும் ஆஸ்துமா பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எக்ஸிமா, அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், கண் கிருமி தாக்குதல் உடையோர் ஆகியோரும் எக்ஸிமா பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
ஆஸ்துமா கண்டு பிடிப்பிற்கு பல பரிசோதனைகள் உள்ளன. இது மருத்துவ முன்னேற்றம். அதே போன்று சிறந்த சிகிச்சை முறைகளும் உள்ளன. நோயின் வீரியத் தன்மைக் கேற்றவாறு சிகிச்சை முறை மாறுபடும்.
ஆஸ்துமா நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்.
* தொந்தரவான அறிகுறிகள் வாரம் ஓரிரு முறைக்கு மேல் இல்லாது இருத்தல்.
* குறைந்த அளவான மருந்துகளே தேவைப்படுதல்
* நுரையீரல் சீராய் வேலை செய்தல்
* அன்றாட வேலைகளை சீராய் செய்தல்.
* முறையான தூக்கம்
* எந்த அவசர சிகிச்சையும் தேவை இல்லாது இருத்தல்
* ஸ்பிரே குழாய் உபயோகிக்காது இருத்தல்
ஆகியவை ஆஸ்துமா நல்ல கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள்.
எத்தனை நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆறு வாரங்களுக்கொருமுறை செக் – அப் செய்வது நல்லது. பல வகையான மருந்துகள் உள்ளன. அவசர சிகிச்சை, தொடர் சிகிச்சை என சிகிச்சைகள் பல பிரிவு படுகின்றன. ஆஸ்துமா பாதிப்பு ஒருவரின் சுறுசுறுப்பான வாழ்க்கையினைக் கெடுத்து விடக் கூடாது. தரமான உணவு, காய்கறி, பழம், கொழுப்பு சத்து, குறைவு, சர்க்கரை குறைவு, நல்ல ஓய்வு, புகை பிடிக்காமை போன்றவை நல்ல வாழ்க்கை முறையினை அளிக்கும்.
* சிகரெட் புகை
* காற்று மாசு
* மகரந்த தூள்
* விலங்குகள்
* வைரஸ்
* கடும் பயிற்சி
* சில அல்லது வறண்ட காற்று
* தூசி பூச்சிகள்
* சென்ட், ரூம் ஸ்பிரே, பெயிண்ட், காரமான சோப் இவற்றினை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா பாதிப்பு கடுமையாகின்றது என்பதற்கான அறிகுறிகள்.
* அடிக்கடி ஏற்படும் பாதிப்பு
* அதிகமாய் இரவு நேர பாதிப்பு
* அன்றாட வாழ்க்கை பாதித்தல்
* மருந்தினால் கட்டுப்படாமை
* அடிக்கடி இன்ஹேலர் உபயோகித்தல்
போன்றவை அதிக கவனம் தேவைப்படுபவை. நினைவில் கொள்ளுங்கள்.
பிறக்கும் பொழுதே யாரும் அலர்ஜியுடன் பிறப்பதில்லை. பரம்பரை ஒருமுக்கிய காரணமாக அமையலாம். 75 சதவீத ஆஸ்துமா பாதிப்புகளில் பரம்பரை முக்கிய பங்கு வகிக்கின்றது. அலர்ஜி, ஆஸ்துமா இவற்றின் பாதிப்புகள் இரண்டும் ஒரு போலத் தெரியலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறு ஆகும்.
ஆஸ்துமா பாதிப்பில் இருந்து விடுபட சில கவனங்கள் :
* நாய், பூனை என செல்லப் பிராணிகள் வேண்டவே வேண்டாம்.
* சிறுசிறு கிருமிகள், படுக்கை, படுக்கை விரிப்பு இவற்றில் வந்து சேர்ந்துவிடும். முறையாக சுத்தம் செய்யுங்கள்.
* கார்பெட் எனும் தரை விரிப்பு வேண்டாம்.
* துவைத்து சுத்தம் செய்யக் கூடிய ஜன்னல் ஸ்கிரீன்களை உபயோகியுங்கள்.
* ஈரமான துணிகளை நன்கு வெய்யிலில் காய வையுங்கள்.
* உங்கள் அறை வெயிலில் மிக புழுக்கமாக இருக்கக் கூடாது.
* தேவையில்லாத ஜன்னல் கதவுகளை மூடி வையுங்கள்.
* வீடு சுத்தம் செய்யும் பொழுது மூக்கினை முறையான மாஸ்க் அணிந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* ஏசி, பிரிட்ஜ் இவைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
* சிகரெட் பழக்கத்தினை அடியோடு விட்டு விடுங்கள்.
* தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் உணவில் கவனம் தேவை. சில உணவுகள் உங்கள் பாதிப்பினை அதிகப்படுத்தலாம். அவைகளை அறிந்து நீக்கி விடுங்கள்.
* ரசாயனப்பொருட்களை முடிந்தவரை கையாளாதீர்கள்.
* மூச்சுப் பயிற்சி மிகவும் உதவும்.
* எடை குறைப்பு செய்யுங்கள்.
* எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதை விடுங்கள். உங்கள் டென்ஷன், டென்ஷனை மேலும் கூட்டவேச் செய்யும்.
* காபி ஓரிரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
* இஞ்சி, பூண்டு, கொடை மிளகாய், புளிக்காத தயிர் இவை பெரிதும் உதவும்.
* அதிக உப்பினை தவிர்த்து விடுங்கள்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாய், பூனையால் வரும் ஆஸ்துமா அபாயம் ~