Author Topic: ~ குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் ஸ்பிரிங் ரோல்ஸ் ~  (Read 505 times)

Offline MysteRy




தேவையான பொருட்கள் :

அவித்த சிக்கன் பீஸ் – 300 கிராம்
முட்டைக்கோஸ் – 50 கிராம்
கேரட் – 1
குடமிளகாய் – 1
வெங்காயம் – 1
சோயா சாஸ் – கால் டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
மைதா – 1 கப்
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* சிக்கனை நீளவாக்கில் வெட்டி வேக வைத்து கொள்ளவும்.
* முட்டைகோஸ், கேரட், குடமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின் சிக்கன், காய்களைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் சாஸ் வகைகளைப் போட்டு பிறகு உப்பு, அஜினாமோட்டோ போட்டு வதக்கி இறக்கவும். கலர் மாறாமல் சுருள வதக்க வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மைதா போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
* பிறகு மாவை சப்பாத்தி போல் இட்டு ஒரு ஓரத்தில் சிக்கன் கலவையை வைத்து சுருட்ட வேண்டும். ஒரு சுருட்டு சுருட்டிய பிறகு இரண்டு ஓரங்களையும் நடுவில் மடித்து பிறகு மீண்டும் சுருட்டவும். கடைசியில் தண்ணீர் கொண்டு ஒட்டவும்.
* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள சிக்கன் உருளைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
* தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்பு :

* இப்படி எல்லாவற்றையும் செய்து பிரிஜ்ஜில் வைத்து தேவையான போது சூடான எண்ணெயில் பொரித்து சாஸ் உடன் பரிமாறலாம்.
* சிக்கனுக்கு பதிலாக வெஜிடபிள், இறால், மட்டனிலும் செய்யலாம்.