அறியாது செய்வது
தவறாகாது
அறியாமை தான்
குறை
தான் நினைத்த பிரதிமை
உருவாகும் வரையில்
தகிக்கும் உலையின் அருகில்
தவம் போல காத்திருக்கிறான்
கொல்லன்
தானாய் நம்மை
மாற்றத்தான்
வாழ்வெனும் உலையில் நம்மைத் தள்ளி
வாசலில் காத்திருக்கிறான்
இறைவன்
இதை உணர்ந்து
துயர்களை சகித்தால்
நம்மை வாரியணைத்துக் கொள்வான்
இறைவன்