என் தேசத்து குயில்கள் கூட்டம்
பறந்து சென்றது இந்த நாட்டை பிரிந்து சென்றது
இறக்கையை விரித்து இமயம் சென்றன
இறங்கிய போது ஒரு இருண்ட தேசம்
சிறுநரிகள் வாட்டத்தில் உறங்கி கிடக்க
சேகரித்த உணவாம் தேயிலை கரும்பை அம்மண்ணில் விதைத்தது
குயில்கள் கூவியதால் காலையில் நரிகளும் எழுந்தன
கூயில்கள் விதைத்ததால் நரிகளும் உழைத்தன உணவிற்காக
விளைந்தது நிலம் மட்டும் அல்ல நரிகளின் மனமும்
குயில்களின் குறவலையை நசுக்க நினைத்தன நரிகள்
மன்னிததது அன்று அகதி குயில்களாய்
மண்ணின் உரிமையை பிடுங்க நினைத்தன நரிகள்
பொறுமையை இழந்த என் இனம் பொங்கி எழுத்தது
பீரங்கி குண்டுகளுக்கு பலி ஆடுகளாய் வீழ்ந்தது
கூயில்களை குற்றம் என்றது புறா
குள்ள நரிகள் தந்திரமாய் அவை புலிகள் என்றது
கூயில்களுக்காக இருந்து குழல் ஊதும் போது குண்டுகள் துளைத்தன
புலிகளாக இருந்து பாயும் போது பீரங்கிகள் பாய்ந்தன
எங்களுக்கு தேசம் தான் கிடைக்கவில்லை
கல்லைக்காவது இடம் ஒதுக்குங்கள்!
இவன்
இரா.ஜெகதீஷ்
