Author Topic: ~ உருளைக்கிழங்கு வடை ~  (Read 337 times)

Offline MysteRy

~ உருளைக்கிழங்கு வடை ~
« on: July 11, 2016, 10:48:47 PM »
உருளைக்கிழங்கு வடை



தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3
ஜவ்வரிசி – கால் கோப்பை
வெங்காயம் – 1
வறுத்த வேர்க்கடலை – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகம் – ஙு தேக்கரண்டி
கொத்தமல்லி – 1/2 கட்டு ( சிறியது )
கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
உப்பு – ருசிக்கேற்ப
நல்லெண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

1.
உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். ( கிழங்கில் தண்ணீர் சேர்க்காமல் )
2.
வெந்தபின் தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
3.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் பொடியாக அரியவும்.
4.
வறுத்த வேர்க்கடலையை ( தோலுரித்தது ) பொடியாக்கவும்.
5.
ஜவ்வரிசியை ஒரு நிமிடம் ஊறவைத்து உடனே வடிகட்டவும்.
6.
வேக வைத்து மசித்த கிழங்குடன் மற்ற எல்லா குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
7.
அடுப்பில் வாணலி வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் சிறிது புளி போட்டு கருக பொரித்தெடுக்கவும்.
8.
பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய உருண்டைகள் செய்து எண்ணெய் தடவிய இலையில் வடையாகத் தட்டி மத்தியில் சிறிது துவாரம் போட்டு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.