Author Topic: ~ உங்கள் இதய ஆரோக்கியம் உங்கள் கைகளில் ~  (Read 439 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226710
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்கள் இதய ஆரோக்கியம் உங்கள் கைகளில்



பொதுவாக உங்கள் இதயம் சிறப்பாக செயற்படின் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனலாம்.
வயது மற்றும் பரம்பரை நோய்கள் போன்ற பல வகையான காரணிகள் இதய ஆரோக்கியத்தை
இதை விட மேலும் பல காரணிகள் உள்ளன. ஆனாலும் அவை பொதுவாக நம்மால் கட்டுப்படுத்தக் கூடியன.
உதாரணத்திற்கு, உயர் குருதியமுக்கமானது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது எடை குறைப்பு, உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கப்படலாம்.
அதிகளவான கொலஸ்ரோல் குருதிக் குழாய்களை அடைக்கின்றன. இதனால் இதயம் பலமாக வேலை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இதனை உடல் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் குறைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயானது மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் குறைத்துக் கொள்ளப்படலாம்.
இதை விட புகைப்பிடித்தல், உடல பருமன், உடற்பயிற்சியின்மை, உணவு முறைகள் போன்றனவும் இதய நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான நோய்களையும் நாம் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும்.
இதன் படி உங்கள் ஆரோக்கியத்தை நீங்களாகவே பேணிக் கொள்ள முடியும்.
நம் இதய ஆரோக்கியத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ முடியும்.