Author Topic: ~ செட்டிநாடு இறால் எண்ணெய் குழம்பு ~  (Read 376 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227374
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செட்டிநாடு இறால் எண்ணெய் குழம்பு



இறால் – கால் கிலோ
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
மல்லி பொடி – 3 தேக்கரண்டி
தேங்காய் – அரை மூடி
சோம்பு – 2 தேக்கரண்டி
தாளிக்கும் வடகம் – பாதி உருண்டை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 6 தேக்கரண்டி

இறாலை கழுவி சுத்தப்படுத்தவும். தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும். வடகம் பொரிந்ததும் இறாலை போடவும்.
மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.
வாணலியை மூடி வைத்து வேக விடவும். இறால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.