Author Topic: ~ பட்டர் பீன்ஸ் கூட்டு ~  (Read 338 times)

Offline MysteRy

பட்டர் பீன்ஸ் கூட்டு



தேவையான பொருட்கள்

பட்டர் பீன்ஸ் – 1 கப்
பூண்டு – 5 (லேசாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ½ தேக்கரண்டி
கறி வேப்பிலை – 5
நீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் – ½ கப்
சோம்பு – 1 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 2 (½ இன்ஞ் துண்டுகள்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1

செய்முறை

பட்டர் பீன்ஸ் – ன் தோலை நீக்கி விட்டு அதன் விதைகளை தனியே எடுத்துக் கொள்ளவும்
பின்பு அவற்றை கழுவி நன்கு சுத்தம் செய்யவும்
அதனுடன் ½ கப் நீர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வைக்கவும். பின்பு அதனை ஆற வைக்கவும்
தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்க்கவும், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்
தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
அரைத்த விழுது மற்றும் வேக வைத்த பீன்ஸ் சேர்க்கவும்
சிறிது நேரம் வேக வைக்கவும். பின்பு கறி வேப்பிலை சேர்க்கவும்
சிறிது நீர் சேர்த்து சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்
நீர் முழுவதும் வெளியேறும் வரை வேக வைக்கவும்
பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி!!!!