Author Topic: ~ மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர் ~  (Read 419 times)

Online MysteRy

மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்



தேவைப்படும் பொருட்கள் :

1. சின்ன வெங்காயம் – 2
2. சமையல் எண்ணெய் – 50 மி.லி
3. காளான்கள் – 1/2 கோப்பை
4. காலிஃப்ளவர் – 2 கோப்பை
5. பச்சைக் கற்பூரம் – 1/4 தேக்கரண்டி
6. வெள்ளை மிளகு – 1 தேக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
8. சர்க்கரை – 1 தேக்கரண்டி
9. தண்ணீர் – தேவையான அளவு
10. சோயா ஸாஸ் – 1 மேஜைக்கரண்டி
11. சோளமாவு – 1 மேஜைக்கரண்டி
12. தக்காளி – 1

முன்னேற்பாடு – 1
1. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முன்னேற்பாடு – 2
1. பதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.
3. காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4. அப்போது அடுப்பை நன்றாக எரிய விடவேண்டும்.
முன்னேற்பாடு – 3
1. வெள்ளை மிளகை நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.
முன்னேற்பாடு – 4
1. தக்காளிப் பழங்களை நன்றாகக் கழுவி, அதை மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

தயாரிப்பு முறை :

1. இப்போது காலிஃப்ளவர் வதங்கிய கடாயில், வெட்டப்பட்ட வெங்காயத்தையும், பச்சைக் கற்பூரத்தையும், வெள்ளை மிளகுப் பொடியையும், ருசிக்குத் தேவையான உப்பையும் – சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
2. நன்றாக வதங்கியவுடன் அதில் சர்க்கரையையும், தேவையான அளவு தண்ணீரையும், சோயா, ஸாஸையும் கலந்து கொதிக்க விடவும்.
3. இந்தக் கலவை நன்றாகக் கொதித்து வரும்போது அதில் சோள மாவைத் தூவவும்.
4. இரண்டு நிமிடங்கள் வரை விடாமல் இதைக் கிளறிக் கொண்டே இருக்கவும்
5. இறுதியாக இறக்கி வைத்தவுடன், வெட்டி வைத்திருக்கும் தக்காளியை எடுத்து அலங்காரமாக அதன் மேல் பரப்பவும்.