Author Topic: ~ மரக்கறி சான்ட்விச் ~  (Read 342 times)

Online MysteRy

~ மரக்கறி சான்ட்விச் ~
« on: July 07, 2016, 03:04:47 PM »
மரக்கறி சான்ட்விச்



தேவையான பொருட்கள்

ரொட்டித்துண்டுகள் – 20
கரட் – 100g
காலிபிளவர் – 100g
போஞ்சி – 100g
முட்டைக்கோஸ் – 100g
உருளைக்கிழங்கு – 250g
பச்சை மிளகாய் ( நறுக்கியது ) – 5
இஞ்சி ( நறுக்கியது) -25g
பெரிய வெங்காயம் – 150g
வெண்ணெய் , எண்ணெய் , உப்பு – தேவையான அளவு

செய்முறை

கரட் ,காலிபிளவர் ,போஞ்சி ,முட்டைக்கோஸ் என்பவற்றை சுத்தம் செய்து சிறிய அளவில் வெட்டி உப்பு சேர்த்து அவிக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு அவித்து தோல் உரித்து நன்கு மசிக்கவும் .

பெரிய வெங்காயம் , பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டவும்.

எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கிளறவும் .

பின்பு அவித்த காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும் .

கூட்டு ரெடி

ரொட்டியின் ஒருபுறம் மட்டும் வெண்ணெய் தடவி , அதன் மேல் கூட்டு வைத்து இன்னொரு ரொட்டி மீது வெண்ணெய் தடவி சேர்த்து பரிமாறுங்கள் .
மரக்கறி சான்ட்விச் தயா