Author Topic: ~ ஸ்வீட் பனானா ரோல் ~  (Read 330 times)

Offline MysteRy

~ ஸ்வீட் பனானா ரோல் ~
« on: July 07, 2016, 02:42:22 PM »
ஸ்வீட் பனானா ரோல்



தேவையானவை:

சப்பாத்தி – 4
மேங்கோ ஜாம் – 2 டேபிள்ஸ்பூன்
பழுத்த வாழைப்பழம் – 2
பழுப்புச் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா
2 டீஸ்பூன்
சாக்லேட் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பழுப்புச் சர்க்கரையை தூளாக்கி, அதில் வாழைப்பழத்தை புரட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து வாழைப்பழத்தை சில நிமிடம் சுட்டு எடுக்கவும். சுட்டு எடுத்த வாழைப்பழத்தின் மேல் ஃப்ரெஷ் க்ரீமை தடவி அதன் மேல் மேங்கோ ஜாமை தடவவும். இனி சப்பாத்தியின் நடுவில் வாழைப்பழத்தை வைத்து ரோல் செய்து மேலே சாக்லேட் சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.