Author Topic: ~ புடலங்காய்ப்புட்டு ~  (Read 378 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226621
  • Total likes: 29008
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ புடலங்காய்ப்புட்டு ~
« on: July 07, 2016, 02:11:02 PM »
புடலங்காய்ப்புட்டு



தேவையான பொருட்கள்:

புடலங்காய் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பட்டை – 3 சிறிய துண்டு
கறிவேப்பிலை – தாளிக்க
மஞ்சள்பொடி – 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 50 கிராம்
எண்ணெய் – 100 மிலி.
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயைப் பொடிதாக நறுக்கவும். பொடியாகச் சீவியும் கொள்ளலாம்.
உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் பிசறி வைகவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
புடலங்காய் சிறிது தண்ணீர் விட்டிருக்கும். நன்றாகப் பிழிந்து விட்டு வாணலியில் சேர்த்து வதக்கவும்.
இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியை மூடி வைக்கவும்.
தண்ணீர் தெளிக்க வேண்டாம். எண்ணெயிலேயே வேக வேண்டும்.
வெந்ததும் பொட்டுக்கடலையைப் பொடி செய்து தூவவும்.