தமிழென்னும் தென்றல் தவழ்கின்ற போது பூவாக நான்மாற வேண்டும் -அங்கு கமழ்கின்ற வாசம் கரைகின்ற போது கவிதைக்குள் சொர்க்கங்கள் தோன்றும் !
தமிழென்னும் வாளை நான் வீசும் வேளை மின்னல்கள் கண்கூசி மாயும் -இன்பத் தமிழ்கொண்டு சென்று வானோர்க்குத் தந்தால் அமிழ்தங்கள் வீணாகிப் போகும் !
தமிழ்பாடும் வாயில் மிளகாயும் கூட தேனாக மாற்றங்கள் காணும் - நாம் தமிழ்பேசிக் கொண்டு நடக்கின்ற போது வெயில்கூட மழைவேடம் பூணும் !