Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் ~ (Read 407 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226714
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் ~
«
on:
July 04, 2016, 11:25:49 AM »
இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்
கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்.
மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.
இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.
மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.
மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?
வயிற்றுப்போக்கு:
வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.
இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன.
மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.
எடை குறைவு:
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.
நீரிழிவு:
இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
வைரஸ் நோய்கள் :
சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.
உடல் வறட்சி:
உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.
இரத்த அழுத்தம்:
இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.
சிறுநீரக கற்கள்:
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.
சரும பிரச்சனைகள் :
பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.
புற்றுநோய் :
சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.
கொலஸ்ட்ரால்:
மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.
பொலிவான சருமம் :
இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.
இயற்கை பானமாக அழைக்கப்படும் இளநீரை அப்படியே சாப்பிடலாம். வெயில் காலங்களில் அனைவராலும் பருகப்படுவது. முழுமையான இயற்கை பானம் என்றே இளநீரைக் குறிப்பிடலாம். இளநீரானது 200 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை, இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நொதிகள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பெட்டகமே இளநீர் என்று சொல்லலாம்.
புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கோடையின் கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சியூட்டும். இளநீரில் ஒற்றைச்சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது. சைடோகின்கள் எனும் தாவர ஹார்மோன்கள் இளநீரில் நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும்.
புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும் வழங்கும். இளநீரிலுள்ள அமினோ அமிலங்கள், நொதிகள், தாதுஉப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ இழப்பை உடனே ஈடுகட்டும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட இளநீர் வழங்குவார்கள்.
நொதிகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் நொதிக்காரணிகள் இளநீரில் நிறையவே உள்ளன. பாஸ்பாடேஸ், கேட்டலேஸ், டிஹைட்ரனேஸ், டயஸ்டேஸ், பெராக்சிடேஸ், ஆர்.என்.ஏ. பாலிமரெசஸ் போன்ற நொதிகள் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கும். பழ வகைகளுக்கு ஈடாக கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புகள், அதிகமாகவே உள்ளது.
பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயமின், பைரிடாக்சின், போலேட்ஸ் ஆகியவை மிகுதியாக இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்சியாக வைப்பதில் இவற்றின் பங்கு அதிகம். பொட்டாசியம் இளநீரில் மிகுந்துள்ளது. 100 மில்லி இளநீரில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 150 மில்லிகிராம் சோடியம் உள்ளது.
இவை உடலுக்குத் தேவையான மின்சக்தி வழங்கும் பொருளாக பயன்படும். பேதியின்போது ஆற்றல் இழப்பை தடுப்பதிலும்பங்கு வகிக்கும்.‘வைட்டமின்’ சி, இளநீரில் குறைந்த அளவு (2.4மில்லிகிராம்) உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப் பொருளாக செயலாற்றும் –
கர்ப்பிணிகள் இளநீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவம்
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Logged
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள் ~