Author Topic: ~ காரக் குழம்பு ரைஸ் ~  (Read 339 times)

Offline MysteRy

~ காரக் குழம்பு ரைஸ் ~
« on: July 02, 2016, 12:16:19 AM »
காரக் குழம்பு ரைஸ்



தேவையானவை:

 உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், ஏதாவது ஒரு வற்றல் (வெண்டை, பாகற்காய் அல்லது மணத்தக்காளி) – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுகிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் – தேவை யான அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண் ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

 நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

 கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, பூண்டையும் வறுத்து எடுத்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து… புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பூண்டு, சாம்பார் பொடி சேர்த்து…. வறுத்த வற்றலையும் போட்டு, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கலாம்). குழம்பு ஆறியதும் உதிரான சாதத்தில் கலந்துகொள்ளவும்