Author Topic: ~ தக்காளி பருப்பு கூட்டு ~  (Read 353 times)

Offline MysteRy

தக்காளி பருப்பு கூட்டு



தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் – 4
நாட்டுத் தக்காளி
துவரம் பருப்பு – 200 கிராம்
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் – 2
வெங்காயம் – 1
கடுகு, – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

*வெங்காயத்தை சிறிய பீஸ்களாக வெட்டிக்கொள்ளுங்கள்.
*பருப்பை அலசி அதோடு, தக்காளி, 6 பூண்டுப்பல் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். (குக்கராக இருந்தால் 4 விசில் வைக்கலாம்).
*நன்கு வெந்ததும், இறக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
*வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, மிளகாய், வெங்காயம், மீதமுள்ள 4 பூண்டுப் பல்லைப் போட்டு வதக்குங்கள்.
*வெங்காயம் பொன்னிறப் பதத்துக்கு வந்ததும், வேகவைத்த தக்காளி – பருப்புக் கலவையைக் கொட்டி உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து 2 கொதி வரும்வரை வைத்திருந்து இறக்குங்கள்.
ஆந்திர பாரம்பரியம் மணக்கும் தக்காளி பருப்பு கூட்டு ரெடி .!!!