Author Topic: ~ மஷ்ரூம் தக்ககாளி சாண்ட்விட்ச் ~  (Read 418 times)

Offline MysteRy

மஷ்ரூம் தக்ககாளி சாண்ட்விட்ச்



தேவையான பொருட்கள்

காளான் – 50 கிராம்
சின்னவெங்காயம் – 10
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
குடைமிளகாய் – 1
உப்பு – தேவைக்கேற்ப
கரம் மசாலா தூள் – அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால்டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பிரெட்ஸ்லைஸ் – தேவைக்கேற்ப
மல்லித் தளை – 1 கைப்பிடி
புதினா – அரைகட்டு

செய்முறை

முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்த மல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ளஏற்றது.
இதில் வைட்டமின்ஏ, வைட்டமின்டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. ரத்த ஓட்டத்துக்கும் கூரியபார்வைக்கும் வழிவகுக்கும்.