Author Topic: ~ உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ~  (Read 456 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226645
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு



தேவையான பொருட்கள்:

 மட்டன் – 1/2 கிலோ உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 1 கப் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் மட்டனை போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ரெடி!