Author Topic: ~ ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ~  (Read 398 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226656
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ப்ராக்கோலி பெப்பர் ப்ரை



தேவையான பொருட்கள்:

 ப்ராக்கோலி – 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது) உப்பு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் ப்ரை செய்வதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ராக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்ப அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெடி!!!