Author Topic: ~ தால்ச்சா ~  (Read 320 times)

Offline MysteRy

~ தால்ச்சா ~
« on: June 27, 2016, 09:38:11 PM »
தால்ச்சா



காய்கள் (முருங்கை, கருணை, வாழை, கத்தரி) – 1/2 கிலோ,
மாங்காய் – 1,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
புளி – ஒரு எலுமிச்சை அளவு (கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்).

பருப்பு வேக வைக்க…

கடலைப் பருப்பு – 100 கிராம்,
துவரம் பருப்பு – 25 கிராம்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

எப்படிச் செய்வது?

பருப்புகளை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். மாங்காய், புளி தவிர வேக வைக்க வேண்டிய காய்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பிறகு, மாங்காயைச் சேர்க்கவும். வெந்த பருப்புகளை அரைக்க வேண்டாம். மசித்தால் போதும். பிறகு பருப்புகள், கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். இஸ்லாமிய இல்லங்களில் பகாறா கானாவுக்கு பக்க உணவாக தால்ச்சா கண்டிப்பாக இடம் பெறும்.