Author Topic: ~ மோர் இடியப்பம் ~  (Read 358 times)

Offline MysteRy

~ மோர் இடியப்பம் ~
« on: June 27, 2016, 09:24:17 PM »
மோர் இடியப்பம்



தேவையானபொருள்கள்

அரிசி மாவு – 200 கிராம்
மோர் –  கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
வத்தல் மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 100 கிராம்
(அல்லது) பெரியவெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 4 ஸ்பூன்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் மாவைக் கொட்டி கொதிக்கும் நீரை விட்டு பிசைந்து கொண்டு, இட்லிப் பாத்திரத்தில், தண்ணீர் சுட்டதும், அதன் இட்லிக் குழியில் துணி போட்டு இடியாப்ப கட்டை கொண்டு மாவை பிழிந்து, ஆவியில் வேக விடவும். பின்னர் அதை எடுத்து ஆற விடவும்.
*மோரைத் தண்ணியாக வைத்துக் கெர்ணடு உப்புக் கலந்து பின் அதில் ஆறிய இடியாப்பத்தை போட்டு பிழிந்தெடுக்கவும்.
*பின்னர் அதை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியை சூடாக்கி 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும். கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.
*சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் நீளமான நறுக்கிய பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.
*இடியப்பத்தை அதில் சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்து கிளறி, சூடானதும் இறக்கி விடவும்.
*இப்போது சுவையான மோர் இடியப்பம் ரெடி.!!!!