Author Topic: ~ நஞ்சில் நாட்டு பன்னீர் பிரியாணி ~  (Read 340 times)

Offline MysteRy

நஞ்சில் நாட்டு பன்னீர் பிரியாணி



தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
நீர் – 1 கப்
பன்னீர் – 1பாக்கெட்
வெங்காயம் – 1(மெல்லியதாக நறுக்கியது)
தக்காளி – 2(நறுக்கியது)
நெய் – ½ கப்
தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி
நெய் – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க
மல்லித்தளை – 1 கப்
பச்சை மிளகாய் – 4
பட்டை – 1 சிறிய துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
நட்சத்திர சோம்பு – 1

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
அரைக்க தேவையான பொருட்களை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
அதனை மென்னையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்
எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
நெய்யை சூடாக்கி அதில் ஜீரகத்தை தாளிக்கவும்
வெங்காயம் சேர்க்கவும்
சிறிதளவு உப்பு சேர்க்கவும்
அரைத்த விழுதை சேர்க்கவும்
பின்பு தக்காளி சேர்த்து வேக வைக்கவும்
பின்பு தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்
பின்பு அரிசி சேர்க்கவும்
நீர் சேர்க்கவும்
பின்பு மூடி வைத்து வேக வைக்கவும்
வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்