Author Topic: ~ நிலக்கடலை சட்னிப் பொடி ~  (Read 403 times)

Online MysteRy

நிலக்கடலை சட்னிப் பொடி



தேவையயான பொருட்கள்

நிலக்கடலை – 1 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கப்
காயத் தூள் – நிலக்கடலைஅளவுதுண்டு
புளி – 1இன்ஞ்துண்டு
சமயல்எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் நிலக்கடலையை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை ஆறவைக்கவும்
பின்பு பெருங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தின் மீது 1 துளி அல்லது 2 துளி எண்ணெய் சேர்த்து விட்டு வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் சிறிது மிளகாய் தூள் தூவவும்.
பின்பு கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அதனை துணியால் நன்கு துடைத்து அதனை கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். நிறம் மாறும் வரை வறுக்கவும்
பின்பு அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.
பின்பு அதனை நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்
நிலக்கடலை சட்னி தூள் ரெடி