காலை வருடும்
கொலுசுக்கு உன்
காலடி ஓசை கேட்டதுவோ
காளை நீ வரும் வழியை
கண் மலர் நோக்கியதோ
உன் இதய துடிப்பின் எதிரொலி
என் மனசுக்குள் ஊஞ்சல் ஆடியதோ
காதலின் பொருள் சொல்வாயோ
காலமெல்லாம் என்னைக்
காக்க வைப்பாயோ.
உன் சிரிப்பின் சங்கீதம்
என் காலையின் பூபாளம்
காதோடு கிசு கிசுக்கும்
தேன் துளிகள்
மாலையின் என்னைத் தாலாட்டும்
ஹம்சத்வனி
சிறைப் பிடித்த என் விழிகளைத்
திருப்பிக் கொடுத்துவிடு
இல்லையென்றால் வந்துவிடு
காலமெல்லாம் என் அருகில்
பக்தனாக....