Author Topic: ~ ரச வடை ~  (Read 427 times)

Offline MysteRy

~ ரச வடை ~
« on: June 24, 2016, 07:42:00 PM »
ரச வடை



தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2கப்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் – தேவையான அளவு
ரசத்திற்கு
நீர் – தேவையான அளவு
மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – 3 தேக்கரண்டி
பூண்டு – 6 பற்கள்
காயப் பொடி – 1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்படி அளவு

செய்முறை

கடலைப் பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்
பின்பு அதனை வடிகட்டி அரைப்பதற்கு எடுத்துக் கொள்ளவும்
மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
அரைத்த விழுதில் அதி அளவு நீர் சேர்க்காமல் படத்தில் உள்ளது போல் அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் கறி வேப்பிலை சேர்க்கவும்
அதில் சறிது சிறிதாக மாவை எடுத்து உருட்டிக் கொள்ளவும்
சூடான எண்ணெயில் போடவும்
அவற்றை பொரிக்கவும்
பொரித்த பின் எண்ணெயிலிருந்து தனியாக எடுத்து வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
சிறிதளவு மிளகாய் தூள் சேர்க்கவும்
சிறிதளவு உப்பு சேர்க்கவும்
மல்லித் தூள் சேர்க்கவும்
பின்பு நசுக்கிய பூண்டு சேர்க்கவும்
புளி சேர்க்கவும்
காயப்பொடி சேர்க்கவும்
பின்பு புளியை தண்ணீரில் கரைக்கவும்
புளி கோதல் மற்றும் பூண்டின் தோலை வெளியேற்றி விடவும்
மீணடும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்
ரசத்தை சுவைத்து பார்த்து சரி செய்து கொள்ளவும்
பின்பு கறி வேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும்
பின்பு வடையை அதில் போட்டு 20-30 நிமிடம் ஊற வைக்கவும்
பின்பு பரிமாறவும்